Saturday, 16 September 2017

சாரண, சாரணிய இயக்க தலைவர் தேர்தலில் எச்.ராஜா தோல்வி: ப.மணி வெற்றி பெற்றார்

சாரண-சாரணியர் இயக்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது.

தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.


கடும் சர்ச்சைக்கு மத்தியில் தலைவர் பதவிக்கு பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி போட்டியிட்டார். இருவரும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது அங்கு வந்திருந்தனர்.

இன்று பிற்பகல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி அறிவித்தார். வாக்களிக்க தகுதி உள்ள 499 பேரில் 286 பேர் வாக்களித்தனர். இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா 46 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி சாரண, சாரணியர் இயக்க தேர்தல் நடைபெற்றதாக எச்.ராஜா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலைமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here