பொதுத்தேர்வு பணியில் இருந்து, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை விடுவிக்க, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், 300க்கும் மேற்பட்டோர், பத்தாம் வகுப்பு கையாளும், பட்டதாரி ஆசிரியர்கள். இவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால், தற்போது நடக்கும் மூன்றாம் திருப்புதல் தேர்வுநடத்த, பள்ளிகளில் ஆளில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தன. இதைத்தொடர்ந்து, அனைத்து மையங்களிலும், பத்தாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களை, கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்குமாறு, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, தனியார் பள்ளி ஆசிரியர்களையோ அல்லது, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களையோ நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: +2 கண்காணிப்பு பணியில், பத்தாம் வகுப்பு பாட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. இருப்பினும் மையங்களில், இந்த ஆசிரியர்கள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக விடுவிக்கும்படி, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment