Wednesday, 7 March 2018

31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!!

வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்டபல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர்15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம்.


அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்இதன் மூலம் மனுதாரர்கள் தங்கள் இறுதிவாதத்தை முன்வைக்க முடியும்’’ என்றார்.அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘அட்டர்னி ஜெனரல் சிறப்பான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் மனுதாரர்கள் மீண்டும் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க முடியாது’’ என்றனர்.

இம்மாதம் 31ம் தேதிக்குள் செல்போன், வங்கிக் கணக்குகள், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் ஆதாரை இணைக்காத ஏராளமானவர்கள் நிம்மதி மூச்சு விடலாம்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here