Sunday, 27 May 2018

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம்  தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள ஜூன் 2018 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் 04.06.2018 முதல் 20.06.2018 வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் 05.06.2018 முதல் 21.06.2018 வரையிலும் நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கு வருகைபுரியவிருக்கும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து 28.05.2018 பிற்பகல் முதல் தேர்வுக்கூட       அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை :-
www.dge.tn.gov.in
  என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM JUNE 2018 – PRIVATE CANDIDATE – HALL TICKET DOWNLOAD என்பதை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (Application Number)
 மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
       

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here