Sunday, 6 May 2018

என் அப்பா எங்கே? நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்கக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். இந்நிலையில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் தேர்வு எழுதினார்.காலை 10 மணியளவில் தொடங்கிய நீட் தேர்வு சரியாக ஒரு மணியளவில் முடிவடைந்தது.தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவன் என் அப்பா எங்கே? என கேட்டது அப்பகுதியில் இருத்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாணவனை கிருஷ்ணசாமியின் உடல் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

2 comments:

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here