Saturday, 2 June 2018

ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் 14வயது இந்திய மாணவர் அசத்தல்

அமெரிக்காவில் நடந்த ஆங்கில எழுத்து உச்சரிப்புப் போட்டியில், 14 வயது அமெரிக்க வாழ் சிறுவன் சிறப்பாக உச்சரித்து மகள் முதல் பரிசு பெற்றுள்ளார். ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பல சுற்று போட்டிக்கு பின்னர் இறுதிச்சுற்றுக்கு 9 பெண்கள் 7 ஆண்கள் உள்பட 16 போட்டியில் முன்னேறினர். இதில் முதல் இரண்டு இடங்களில் வந்த அமெரிக்க வாழ் இந்தியரான நெயிஷா மோடி, மற்றும் கார்த்தி நெம்மானி, 14 ஆகியோர் இடையே கடும் போட்டிய நிலவியது. இதில் கார்த்திக் நெம்மானி வெற்றி பெற்று முதல் பரிசாக 42 ஆயிரம் டாலர் ரொக்கப்பணம் ,வெற்றி கோப்பையை வென்றார்.
கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் போன்ற போட்டிகளில் தொடர்ந்து இந்திய வம்சாவளியினரே வெற்றி பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கார்த்தி நெம்மானி வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள் குவிக்கின்றன.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here