‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.
விண்ணப்பத்திற்கான காலம் முடிவடைந்த பின்னர், ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது. ஜூன் 8-ந்தேதி பி.எட் இறுதி ஆண்டு தேர்வின் ஒரு தாளுக்கான பரீட்சையும் நடைபெற இருக்கிறது.
ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் பி.எட். இறுதி ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவ-மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment