வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்காக அறிவியல் செயல்முறை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு அறிவியல் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் உபகரணங்கள் வடிவமைத்து 10 வகையான செயல் முறைகளின் மூலம் அடிப்படை அறிவியல் தத்துவங்களை மிக எளிமையான முறையில் தெரிந்துகொள்ளலாம். இதற்கு உதவியாக வீடியோ பட காட்சியும், வழிகாட்டும் முறைகளுடன்கூடிய வசதிகள் அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வேலூர் அறிவியல் மையத்தில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் காலை 11 மணி முதல் 7, 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 25 பேர் அடங்கிய 2 குழுக்களாக நடைபெற உள்ளது. ஒரு குழுவில் 25 பேர் மட்டுமே பங்கு பெற முடியும். முதலில் பதிவு செய்யும் மாணவர்களின் வரிசைப்படி 25 பேர் அடங்கிய குழுவாக பிரிக்கப்பட்டு பங்குபெற அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட அறிவியல் மைய அலுவலர் துரைராஜ் ஞானமுத்து தெரிவித்தார்.

No comments:
Post a Comment