Tuesday, 2 January 2018

100 சதவீதம் தேர்ச்சி பெற தனியார் பள்ளிகளில் மாணவர்கள் களையெடுப்பு

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற கற்றலில் பின்தங்கிய மாணவர்களை களையெடுக்கும் பணிைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 76 ஆயிரம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். அரையாண்டுத் தேர்வு விடுமுறையொட்டி, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, தனியார் பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 272 தனியார் பள்ளிகளில், மாணவர்கள் அரையாண்டுத்ேதர்வு மதிப்பெண் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் சிறப்பாக படிப்பவர்கள், சராசரியாக படிப்பவர்கள், கற்றலில் பின்தங்கியவர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர்.

 
சிறப்பாக படிப்பவர்களை சென்டம் பெறுவதற்கான பயிற்சியும், சராசரியாக படிப்பவர்களை அதிக மதிப்ெபண்ணில் தேர்ச்சி பெறவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இறுதியாக கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளது. கற்றலில் பின்தங்கியவர்கள் தேர்வு எழுதினால், 100 சதவீத தேர்ச்சி பறிபோகும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகின்றனர். இதையடுத்து, பல்வேறு காரணங்களை கூறி கற்றலில் பின்தங்கியவர்களை தனித்தேர்வர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு நீங்கலாக, கலைப்பாடப்பிரிவு கற்றல் பின்தங்கியவர்களை வடிகட்டப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-தினகரன் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here