Tuesday, 2 January 2018

ரூ.25 செலுத்தினால் வாக்காளர் அட்டை: மீறினால் நடவடிக்கை

கோவை கலெக்டர் அலு வலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. அரசு அலுவலகங்களில் பெறப்படும் சான்றிதழ், வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது.

வாக்காளர் அட்டை பெற கட்டணமாக ரூ.25 செலுத்தினால் போதும். சில இடங்களில், ரூ.50, ரூ.100 என, அதிக கட்டணம் வசூலிப்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் சென்றது.நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும், அதிகமான தொகை வசூலிக்கக் கூடாது என, கலெக்டர் ஹரிகரன் எச்சரித்துள்ளார். இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.


வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க அதிக கட்டணம் கேட்டாலோ அல்லது, சிரமம் ஏற்பட்டாலோ, தாசில்தார்கள், தனித்துணை தாசில்தார்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here