Wednesday, 5 September 2018

சேலத்தில் ஆசிரியர் தினவிழாவில் நெகிழ்ச்சி: பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார்

பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார்.மேலும்,பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.












பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கும் பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here